Friday, April 3, 2009

ஓர் இனிய துவக்கம்


இன்று இந்த பதிவுகள் பக்கத்தை தொடங்கியிருக்கிறேன். எண்னங்களையும், நிகழ்கால நடப்புகள் குறித்த எனது பார்வைகளையும், இங்கே பதிவு செய்ய உத்தேசித்திருக்கிறேன்.

எதை பதிவு செய்வது? எதை விட்டுவிடுவது? மக்களால் விரும்பப்படுவது எது? போன்ற எல்லைகள் எதையும் வகுத்துக் கொள்லாமல் விரும்புகின்ற எதையும்,எப்படியும் இங்கு விதைக்க முடியும்.அறிந்துகொண்ட விஷயங்களை பிறருக்கு அறியத் தருவதும், ஒரு கற்றல் செயலே! அந்த வகையில் நான் இங்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளப் போகிறேன்.

பிறருக்கு தருவதற்கு முன் நமக்கு உபயோகமானதா என்று எண்னிப் பார்த்து,பின்பு தருவதே மாண்பாகும்.நமக்கு கேடு விளைவிக்கக் கூடிய,உபயோகமில்லாத ஒரு பொருளை பிறருக்கு தருவது,நகைப்பிற்குறியதாகளாம்.பயனில சொல்லாமை என்பதைப் போல பயனில பதியாமையும் மிக நன்று.

தமிழ் பதிவுலகம் தற்போது ஒரு சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சில பத்துகளாக இருந்த தமிழ் பதிவுகள் தற்போது சில நூறாக ஆகியிருக்கிறது.அதிலும் கணினிநுட்பம் சார்ந்த பதிவுகள் அனேகம்.பதிவுகளில் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறை பதிவுகளும், இப்போது இனையத்தில்.

கடலில்கரைத்த பெருங்காயம் என்பார்கள்.அதைப்போல இந்தப்பதிவுத் தொடரும் தமிழ் பதிவுக் கடலில் இனைகிறது.ஆனால் கரைந்து போகாது.